யாழில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 262 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மாவட்ட அபிவிருத்தி திட்ட முன்னேற்றம் தொடர்பான கூட்டத்தின் பின்னர் அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (25.11.2026)ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டுக்காக சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் ஊடாக 262.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பண ஒதுக்கீடு
அதில் முக்கியமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்குப் பொதி வழங்குவதற்கு 210 மில்லியன் ரூபாவும், முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்குவதற்கு 114 மில்லியன் ரூபாவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுக்காக 5 மில்லியன் ரூபாய், அதேபோல பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு, சர்வதேச சிறுவர் தினம், முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைத்திட்டங்கள் போன்ற பல வேலைத்திட்டங்களுக்குப் பண ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது.
அதேபோல, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு 11 மில்லியன் ரூபாவும், அதிலேயே இருக்கின்ற, அதிலே ஒரு வேலைத் திட்டமாக இருக்கின்ற நன்னடத்தை பராமரிப்பில் இருந்து 18 வயது பூர்த்தியானதுக்குப் பிறகு சமூகத்தை அண்மிக்கின்ற சிறார்களுக்கான வீடமைப்பு வேலைத் திட்டத்துக்கு யாழ். மாவட்டத்துக்கு 49 வீடுகள் அமைப்பதற்காக தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் 98 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
ஒட்டுமொத்தமாக 262 மில்லியன் ரூபாய்க்கான வேலைகள் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. திவ்யட்ட சவியா - வாழ்க்கைக்குப் பலம் என்ற தொனிப்பொருளில் வழங்கப்படுகின்ற நன்னடத்தை நிலையங்களில் இருந்து வெளியேறிய சிறார்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் இன்று பயனாளிகளுக்குக் கையளித்தோம்.
அதின் பிரகாரம் இன்னும் 48 வீடுகள் முழுமைப்படுத்தி அந்தப் பயனாளிகளுக்கான வழங்க வேண்டியிருக்கின்றது. இந்த நாட்களில் அந்த நடவடிக்கைகளை எவ்வாறு நடக்கின்றது என்றதை நாங்கள் பார்வையிட்டோம்.
யாழ். மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையுமே முழுமைப்படுத்தி, இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பெண்களை, சிறார்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அவர்களுக்கான நல்லதொரு வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக வேலைத்திட்டங்களுக்காக முழு நேரப் பணியுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.