திடீரென தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார் - விபரீத சம்பவம்
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் (Samara Sampath Dasanayake) கார் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் பண்டாரவளை (Bandarawela) - ஹல்பே பகுதியில் இன்று (16.4.2024) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
காயம் ஏற்படவில்லை
சாமர சம்பத் தசநாயக்க (Samara Sampath Dasanayake) மஹியங்கனையிலிருந்து எல்ல (Ella) பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.
எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் (fire department), எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
