மயிலத்தமடு எங்கே இருக்கின்றது: கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர்
மட்டக்களப்பு, மயிலத்தமடுவில் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராகப்
பண்ணையாளர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், "மயிலத்தமடு
எங்கே இருக்கின்றது?" என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வியப்புடன் கேட்டுள்ளார் .
மயிலத்தமடுவில் இடம்பெறும் பேரினவாத அடக்குமுறை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு வினவியுள்ளார்.
அதேவேளை, குருந்தூர்மலை தொடர்பான விடயங்களை அறிந்து வைத்துள்ளதாகவும் உண்மையில் சில அரசியல்வாதிகள்தான் இந்த விடயத்தை பதற்றமான நிலைக்குள் இட்டுச் செல்கின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டயுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகச் செயற்பட்ட ரி.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றமைக்கு அரச அழுத்தங்கள் காரணமில்லை எனவும் தனது குடும்பத்திலுள்ள பிரச்சினையால்தான் அவர் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றார் எனவும் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை விவகாரம்
அதேவேளை, இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்தது என்றால், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் அவருக்கு அதிகாரம் இருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதையெல்லாம் விடுத்து அவர் அச்சுறுத்தலால்தான் நாட்டைவிட்டு வெளியேறினார் என்று தெரிவிப்பது பொருத்தம் இல்லை என்பதோடு அதில் உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam