எவ்விதத் தொழிலும் இன்றி லால் காந்த மாளிகை கட்டியது எப்படி.. சஞ்சீவ எதிரிமான்ன கேள்வி
அரசியல்வாதிகள் எளிமையாக வாழ வேண்டும் எனப் போதித்த லால் காந்தவின் சொகுசு வாழ்க்கை, அவரது அரசியல் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பியானோக்கள் வாசிக்கப்படும் மாளிகைகள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 60 ஆண்டுகளாகத் தூய அரசியல் பேசுவதாகக் கூறிக்கொண்டு திசைக்காட்டி தரப்பினர் முன்னெடுத்த அரசியல் நாடகத்தை, லால் காந்தவின் இந்த மாளிகை ஒரு சில நிமிடங்களில் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வீட்டை ஒரு 'தேசிய மரபுரிமையாக' அறிவிக்க வேண்டும் என நான் முன்மொழிகிறேன். அந்தளவிற்கு இது கொள்கை முரண்பாட்டின் அடையாளமாக உள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் குழுவில் அரசியலுக்கு வருவதற்கு முன் உயர் மட்டத் தொழில்களில் ஈடுபட்டு, பல இலட்சம் ரூபாய் ஊதியம் பெற்றவர்கள் பெரிய வீடு கட்டுவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதத் தொழிலும் அல்லது வியாபாரமும் செய்யாமல், முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே இருந்த லால் காந்த போன்ற ஒருவரால் இவ்வளவு பெரிய மாளிகையை எப்படிக் கட்ட முடிந்தது?
தன்னிடம் ஒரு சதம் கூட இல்லை என்று கூறிக்கொண்டு, தன் பிள்ளைக்கு ஒரு புல்லாங்குழல் கூட வாங்கிக் கொடுக்க முடியாத ஏழைத் தந்தையர்களைத் தமது பேச்சால் இவர்கள் ஏமாற்றினார்கள். ஆனால், இன்று அந்த மாளிகையில் பியானோக்கள் வாசிக்கப்படுவது மிகப்பெரிய முரண்பாடாகும்.

அரசியல்வாதிகள் சொத்து சேர்க்கக் கூடாது எனப் போதித்த இவருக்கு, இவ்வாறான மாளிகையில் வாழ்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது? இத்தனை காலம் மற்ற அரசியல்வாதிகளின் உடைகள், வாகனங்கள் மற்றும் பிள்ளைகள் குறித்து மிக மோசமாக விமர்சித்தவர்களுக்கு, தற்போது உரிய பதிலடியே கிடைத்துள்ளது.
எவ்விதத் தொழிலும் இன்றி முழுநேர அரசியல் செய்துவிட்டு இவ்வளவு சொத்து சேர்த்துள்ள இவர்களின் போலித்தனத்தை இனியாவது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam