இராணுவ பாதுகாப்பை ஏற்க மறுத்த மனோ கணேசன்
நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது முகநூல் பதிவொன்றின் ஊடாகவே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“திம்பிரிகஸ்யாய இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் "எனது பாதுகாப்புக்காக" என்று கூறி, எனது ஸ்ரீமகாவிஹார வீதி வீட்டுக்கு வந்தார்கள்.
வழமையான மந்திரி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மேலதிகமாக மூவர் வந்தார்கள். இருதரப்பையும் "நன்றி தம்பிகளா, வேண்டாம்" என திருப்பி அனுப்பி விட்டேன்.
2005-2009, கொழும்பில் வெள்ளை வான் கடத்தல், படுகொலை நெருக்கடி காலத்தியிலேயே என் இதே வீட்டில் இப்படியே தான் இருந்தேன். இனியென்ன, இப்படியே இருக்கும்வரை இருப்போம்.” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
