இராணுவ நடவடிக்கைகள் நீடிக்காது! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களுக்குள் நிறைவடையும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக தரைவழி ஆக்கிரமிப்பு இன்றி அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் நடைபெற்று வரும் 'G7' பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே மார்கோ ரூபியோ இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள் நீடிக்காது
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பல மாதங்கள் நீடிக்காது என்றும், சில வாரங்களுக்குள்ளேயே தகுந்த முறையில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் ரூபியோ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஹோர்முஸ் நீரிணை ஊடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டணங்களை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து G7 பிரதிநிதிகள் அவருடன் கலந்துரையாடியுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக வர்த்தக நன்மைகளைப் பெறும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள், சுதந்திரமான போக்குவரத்துப் பாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.