கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக 110 புலம்பெயர் பணியாளர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று (05.10.2022) மாலை தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த குழுவில் உற்பத்தித் துறைசார் பணியாளர்கள் 71 பேர் மற்றும் மீன்பிடித் துறைசார் பணியாளர்கள் 39 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த விடயத்தை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்பு
அதேநேரம், ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்புகளை இலங்கைக்கு திறப்பது குறித்து ஜப்பானில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களின் நிறைவேற்றுக் குழுவுடன், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ஜப்பானில் பணியாற்றத் தயாராக இருக்கும் இலங்கை நிபுணர்களை, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைப்பதற்கான தளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
