தீவிரமடையும் போர் பதற்றம்! என்றுமில்லாதவாறு இலங்கையில் உருவான எரிபொருள் வரிசை
மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக, இலங்கையில் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துள்ளனர்.
பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.
என்றுமில்லாத மிக நீண்ட வரிசை
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது. இதே வேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது. இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன.







காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam