நடுவானில் போர் பதற்றத்தினால் தடுமாறிய விமானம்! அவசரமாக சென்னையில் தரையிறக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்க முடியாத சூழலில் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.
போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் குறைந்த அளவில் விமானச்சேவை தொடங்கியுள்ளன.
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்
இந்நிலையில், துபாய் நோக்கி இன்று காலை 3.50 மணிக்கு 37 பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்க முடியாத சூழல் நிலவியதால், மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வருகின்றது.இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், பெரும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
விமான சேவை கடுமையாக பாதிப்பு
இதனால் கடந்த சில நாட்களாகவே அங்கு விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றின் விமானச் சேவை மொத்தமாக முடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிய பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri