மத்திய கிழக்கு மோதல் : ஹவுதி தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவ தளபதிகள் அவசர ஆலோசனை
சவூதி அரேபியா மீதான ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவத் தளபதிகள் ரியாத்தில் அவசர உயர்மட்ட ராணுவப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், தங்கள் கூட்டணி நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்க
அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ஏழு நாட்களில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல் திட்டத்தை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்க ஈராக்கின் பாக்தாத், நஜஃப், எர்பில் மற்றும் சுலைமானியா ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களிலிருந்தும் ஈரான் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக, ஈரானுக்கு விமான சேவைகள் மறுக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிற்கும் விமான சேவைகள் இயங்க அனுமதிக்கப்படாது என ஈரானின் உயர்மட்ட ஆலோசகர் முகமது மொக்பர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டம்
மற்றொரு நிகழ்வாக, ஏமனின் லஹிஜ் மாகாணத்தில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நுஃமான் மலை உச்சியை ஹவுதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக சவூதி ஆதரவு ஏமன் அரசுப் படைகள் அறிவித்துள்ளன.

அதேவேளையில் தெற்கு லெபனானில் சந்தேகத்திற்கிடமான இலக்கு ஒன்றைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவத்தினால் இடைமறிப்பு ஏவுகணை ஒன்று வீசப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் இடையே, பதற்றத்தைத் தணிப்பது தொடர்பாகவும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்தும் கட்டார் பிரதமர் மற்றும் ஈரான் அதிபர் ஆகியோர் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு : மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....