மித்தெனிய முக்கொலை விவகாரம் : பொலிஸ் அதிகாரி கைது
மித்தெனிய (Middeniya )முக்கொலைச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜுலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு 12 டி-56 ரவைகளை இந்த சந்தேகநபர் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        