பாடசாலை பாடத்திட்டங்களில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஏனைய தரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது, ஆனால் 10ம் தர பாட முறைமை பகுதியளவில் மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கற்றல்
இந்த மூன்று தரங்களிலும் புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமைச்சரவை பத்திரங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், தொகுதிகளைத் தயாரித்தல், புத்தகங்களைத் தயாரித்தல் போன்ற சீர்திருத்தச் செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
