புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் விரைவில்...!
புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்," புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ் இலங்கை மின்சார சபை (CEB) பிரிக்கப்படுவதும் நீக்கப்படும்.
மின்சார திருத்தச் சட்டமூலம்
எங்கள் அரசாங்கம் எந்த மின் நிலையங்களையும் அல்லது மின்சார பரிமாற்றத்தையும் தனியார்மயமாக்காது.
முந்தைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை எட்டு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டது, ஆனால் எங்கள் அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாது.
மின்சாரம் மிகக் குறைந்த விலையில் வாங்கப்படுவதை எமது அரசாங்கம் எப்போதும் உறுதி செய்யும்.
முன்பு ஒரு அலகுக்கு 30 ரூபாவாக இருந்த மின்சாரத்தின் விலையை எம்மால் 18 முதல் 19 ரூபா வரை குறைக்க முடிந்துள்ளது.'' என கூறியுள்ளார்.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா? Cineulagam
