மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Namal Rajapaksa Airbus Bribery Scam
By Benat Nov 01, 2026 10:10 AM GMT
Report

நாமல் ராஜபக்சவை இலங்கையின் நெல்சன் மண்டேலாவாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வலுக்கட்டாயமாக பதிவு செய்யப்பட்ட பெயர் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பாக கபில சந்திரசேனவே முதலில் கைது செய்யப்பட்டார். அவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்துச் சென்று, அதன் பணிப்பாளர் நாயகத்தின் அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவரது வாக்குமூலத்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகப் பதிவு செய்ததாகவும் கபில சந்திரசேன நீதவானிடம் சத்தியப்பிரமாணம் செய்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், இன்றுவரை அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. அவர் செய்த முறைப்பாடும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம் | Namal The Nelson Mandela Of Sri Lanka

அதேவேளை, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் இருவர் குறித்து எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களுள் ஒருவர் கபில சந்திரசேன. அவரது வங்கிக் கணக்கின் ஊடாகப் பணம் சென்றுள்ளது. மற்றையவர் நிமல் பெரேரா. அவரது வங்கிக் கணக்கிற்கும் குறிப்பிட்ட தொகை பணம் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்படியானால், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டில இருவர்தான் இருக்கக்கூடும். ஆனால், முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இரண்டாவது சந்தேகநபரான நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அவரைக் கைது செய்யாமல், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொண்டு திரும்பியுள்ளனர்.

அந்த வாக்குமூலத்தில், தனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துச் சென்று நாமல் ராஜபக்சவின் அறையில் வைத்துவிட்டதா அவர் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பணம் எப்போது, கொடுக்கப்பட்டது, எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது,  எந்த நேரத்தில் கொடுக்கப்பட்டது,  எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பன தொடர்பில் எந்தவொரு விபரமும் தெரிவிக்கப்படவில்லை.

மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம் | Namal The Nelson Mandela Of Sri Lanka

100 மில்லியன் ரூபாய் என்பது சாதாரணமாக இரண்டு பெரிய மூட்டைகளில் எடுத்துச் செல்ல வேண்டிய பணமாகும். ஆனால், அந்தப் பணம் எந்த வங்கியில் இருந்து மீளப் பெறப்பட்டது என்பதைக் கூட அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சத்தியப்பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச இன்று வரையிலும் பிணை வழங்கப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்சவை சிறையில் வைத்திருப்பதன் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடர முடியும் என்று நினைத்தால், அது அவரது தவறான கணிப்பாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

நேரில் முன்னிலையாக வரமாட்டேன் என அறிவித்த பசில்..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நேரில் முன்னிலையாக வரமாட்டேன் என அறிவித்த பசில்..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்! இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை

அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்! இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US