நுண்கடன்களை செலுத்த முடியாமல் உயிரை மாய்த்துள்ள 200 பெண்கள்
கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிதிக் கடன் விவகாரம் மீதான விவாதம் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நுண்கடன்
இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் கடன் மற்றும் நுண்கடன் வணிகங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதாகும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக மத்திய திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்.
அத்துடன், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு தலா நான்கு பிரதிநிதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri