யாழில் பணப்பரிசு வெற்றியாளர் என கூறி பாரிய மோசடி: விசாரணையில் இருவர் கைது
யாழ்ப்பணாத்தில் 18 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது என மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
“தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 இலட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும்.
18 இலட்சம் ரூபா மோசடி
அந்த பணத்தை உடனே வைப்பிலிடுங்கள்” என கூறி , இந்த இருவரும் 18 இலட்ச ரூபாயை மோசடி செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு , தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி , தங்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் , உங்களுக்கு பெருந்தொகை பணம் விழுந்துள்ளது என கூறியுள்ளார்.
அந்த பணத்தினை பெற வரியாக 18 இலட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். 18 இலட்ச ரூபாயை செலுத்தினால், பரிசு பணத்தினை பெற முடியும் என கூறி, கணக்கிலக்கம் ஒன்றினையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான நபர் வழங்கப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு 18 இலட்ச ரூபாய் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
இருவர் கைது
அதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது , அந்த இலக்கம் செயலிழந்து காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , குறித்த தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று , விசாரித்த போதே , தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாதிப்புக்கு உள்ளான நபர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தொடர் விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான மற்றுமொரு நபரை, மோசடிக்கு துணை போன குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri