இன்று நள்ளிரவு முதல் அற்புதமான விண்கல் மழையை காண அறிய வாய்ப்பு
இந்த ஆண்டு தென்பட்ட மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றான பெர்சீட் விண்கல் மழை இன்று முதல் நாளை வரை மேற்கு வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விண்கல் மழை உச்சம்
இந்நிலையில், இதன் முதல் விண்கல் மழை கடந்த மாதம் தென்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று(11) நள்ளிரவுக்குப் பின்னர் பெர்சீட் விண்கல் மழையின் உச்சம் தென்படும் என விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விண்வெளியில் இருந்து பூமியின் மீது விண்கற்கள் பொழிவதே விண்கல் மழையாகும்.

பெர்சீட் விண்கற்கள் ஸ்விஃப்ட்-டட்டில் என்ற வால் நட்சத்திரத்தால் விட்டுச் செல்லப்பட்ட தூசுக்களாகும்.
இது சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிற நிலையில், ஒரு முறை சுற்றி வர 133 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
பூமியானது சூரியனைச் சுற்றி வரும்போது அதன் பாதையில் குறுக்கிடும் தூசுக்கள், மேகத்தின் வழியாக நகரும் வேளை, அதன் ஈர்ப்பு தூசுக்ககளை தன்னை நோக்கி இழுத்து விண்கல் மழையை உருவாக்குகிறது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri