சமஷ்டி அடிப்படையிலான தீர்விற்கு வேட்பாளர்கள் முன்வருவார்களா : கேள்வி எழுப்பிய சிறீதரன்
தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்குவதாக எழுத்து பூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறீதரன் (S.Sritharan) கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அது தொடர்பில் பரிசீலிப்பதற்கு பொதுகட்டமைப்பு தயார் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
இக்கால கட்டத்தில் தற்போது எம்மிடம் இருப்பது ஒரேயொரு ஜனநாயக உாிமையான வாக்கு எனும் ஆயுதம் ஆகும்.அதனை எவ்வாறு பிரயோகிக்கப் போகின்றோம் என்பதில் தமிழ் பொதுவேட்பாளர் என்னும் விடயமும் உள்ளடங்கியிருக்கின்றது.
இந்த நிலையில் இந்த பொதுவேட்பாளர் விடயத்தினை எதிர்ப்பவா்கள் என்ன காரணத்திற்காக எதிர்க்கின்றாா்கள் என்றும், யாரை இந்த தேர்தலில் ஆதரிக்கின்றாார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளாார்.
அத்துடன், வரலாற்றில் இந்தத் தேர்தல் காலத்திலேயே தென்னிலங்கைக் கட்சிகள் நேரடியாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து தமக்கு ஆதரவளிக்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள விடயம், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு ஏதோவொரு விதத்தில் தென்னிலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இழந்து போன எமது இனத்தின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இந்த தோ்தலிலும் நாம் தொடர்ந்தும் போராடுவோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |