மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு கௌரவிப்பு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
36 ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்று ஆர்ஜென்டினா சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் உலக கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தாளில் (ஆர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஜென்டினாவின் நாணயமானது, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது.
1978இற்கு பின்னர் இந்த ஆண்டு 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்று சாம்பியனாக நாடு திரும்பிய வீரர்களை உற்சாகத்துடன் இலட்சக்கணக்கான ஆர்ஜென்டினா மக்கள் ஒன்றுதிரண்டு வரவேற்றனர்.
மெஸ்ஸிக்கு கௌரவிப்பு
இந்நிலையில், உலகக்கிண்ணத்தை பெற்றுத்தந்த அணித்தலைவர் மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா நாணயத்தாள்களில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில்,ஆர்ஜென்டினா பணமதிப்பின்படி 1,000 பெசோ நாணயத்தாளில் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni)யை கௌரவிக்க, கரன்சியில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.