மினி மியூசியமாக மாற்றப்படும் மெஸ்ஸி தங்கிய அறை
2022 FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் போது கத்தாரில் ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தங்கிய அறை தொடர்பில் கத்தார் பல்கலைக்கழகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது ஆர்ஜென்டினா அணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்குப் பதிலாக, பரந்த பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.
மெஸ்ஸி தங்கிய அறை
இதற்கமைய உலக கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், மெஸ்ஸி தங்கிய அறையை சிறிய அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
கத்தார் பல்கலைக்கழகம் இதனை ஒரு பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது.
இதேவேளை போட்டியின் போது ஆர்ஜென்டினா அணி தங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து அறைகளின் தொடர் புகைப்படங்களை கத்தார் பல்கலைக்கழகம் பகிர்ந்துள்ளது.
மினி மியூசியத்தின் காட்சிகள்
ஆர்ஜென்டினா அணியின் உடை நிறத்திற்கு ஏற்றவாறு முழு பகுதியும் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பல வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சிகளின் புகைப்படங்களும் நிறுவனத்தால் அறைகளைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன.
போட்டியின் போது, லியோனல் மெஸ்ஸி B201 அறையில் தங்க வைக்கப்பட்டார், பின்னர் அவர் செர்ஜியோ அகுரோவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பல்கலைக்கழக குடியிருப்பில் உள்ள மெஸ்ஸியின் அறையில் இனி விருந்தினர்கள் தங்க மாட்டார்கள், மேலும் அதில் மெஸ்ஸி விட்டுச் சென்ற அனைத்து உடமைகளும் மாணவர்கள் மற்றும் நாட்டிற்கு வருபவர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
