கிளிநொச்சியில் காணாமல் போன நபரின் சடலம் குளத்தில் மீட்பு
புதிய இணைப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முறிப்பு குளத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது சடலம் இன்றையதினம்(4) முறிப்பு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த தங்கவேல் சிவகுமார் என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் காணாமல் போனதை தொடர்ந்து, இன்றையதினம் குளத்தில் மிதந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
செய்தி: கஜிந்தன்
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி(Kilinochchi) கோணாவில் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(2) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும், அவரது பாதணியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காணாமல் போனவரை தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |