இலங்கை இளைஞர் யுவதிகளின் மோசமான மனநிலை! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
கடந்த 12 மாதங்களில் பிள்ளைகளிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக ஆலோசகர், மருத்துவர் சிராந்திகா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தற்கொலை எண்ணம், திட்டமிடல் மற்றும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினைகளாகவே உள்ளதாகவும் கூரியுள்ளார்.
மனச்சோர்வு உணர்வு
நாட்டில் பெரும்பாலும் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் மனச்சோர்வு உணர்வுகளை அனுபவித்து வருகதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 22.4% பேர் தனிமையை உணர்கிறார்கள் என்றும் 11.9% பிள்ளைகள் கவலை காரணமாக உறங்க முடியவில்லை என்றும், 7.5% பேருக்கு 2016 முதல் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக பெண்களில் 15.4% பிள்ளைகள் தற்கொலை எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.
9.6% பேர் தற்கொலைத் திட்டங்களைத் தீட்டுயுள்ளதுடன், 9.1% பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
எச்சரிக்கை
கடந்த 30 நாட்களில் புகையிலை பயன்பாடு 5.7% அதிகரித்துள்ளது என்றும், புகையற்ற புகையிலை நுகர்வு 7.3% அதிகரித்துள்ளது.
இ-சிகரெட்டுகளின் பயன்பாடும் வளர்ந்து வரும் கவலையாக உள்ளது, 5% தனிநபர்கள் அதைப் பயன்படுத்துவதாகப் புகாரளிக்கின்றனர்.
தற்போது பிள்ளை டிஜிட்டல் சூழல்களில் அதிகமாக மூழ்கி விட்டதால், 2016 முதல் இந்தப் பிரச்சினைகள் நீடித்து வருவதை தரவு எடுத்துக்காட்டுகிறது.
21.9% ஆண்கள் இன்னும் கொடுமைப்படுத்தப்படுவதாகப் புகாரளித்தாலும், ஒட்டுமொத்தமாக கொடுமைப்படுத்துதல் குறைந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில், வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில், பெண்களை விட 5.4% அதிகமான ஆண்கள் சைபர்புல்லிங்கை அனுபவித்துள்ளனர் என கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 மணி நேரம் முன்

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
