திருகோணமலை - சேருநுவரவில் உழவு இயந்திரம் புரண்டதில் ஒருவர் பலி
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (01.10.2023) காலை 11.30 மணியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் - பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுந்தரவதனன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி - தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த மூன்று பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri