வெளியேற்றிய இந்தியா: மற்றுமொரு நாட்டில் சீன ஆதிக்கம் - செய்திகளின் தொகுப்பு
மாலைதீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிக்கை தோற்கடித்து முகமது முய்சு வெற்றியை தனதாக்கியுள்ளார்.
ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தோல்வியை ஒப்புக் கொண்டு, 54% வாக்குகளைப் பெற்ற தனது போட்டியாளரான மொஹமட் முய்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17ஆம் திகதி மொஹமட் முய்சு பதவியேற்கும் வரை காபந்து ஜனாதிபதியாக சோலிக் செயற்படவுள்ளார்.
2018 முதல் அதிகாரத்தில் இருக்கும் மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் (எம்.டி.பி) சேர்ந்த 61 வயதான இப்ராஹிம் முகமது சோலிக் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தியதுடன், "இந்தியாவுக்கு முதலிடம்" என்ற கொள்கையில் இரு்ந்தார்.
ஆனால், சீன ஆதரவு வேட்பாளரான, தலைநகர் மாலேவின் மேயர் முய்சு, "இந்தியாவே வெளியேறு" என்ற கோஷத்துடன் பிரசாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |