பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதல்! இந்திய உளவுத் துறை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இக் குண்டுத் தாக்குதல்களை இந்தியாவின் உளவுத் துறையே நடாத்தியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்ப்ராஸ் புக்டீ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
தற்கொலை குண்டு தாக்குதல்
பாகிஸ்தான் - பலூசிஸ்தானில் மஸ்துங் (Mastung) மாவட்டத்தில் உள்ள மதினா மசூதி அருகே நேற்று முன்தினம் (29.09.2023) தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மிலாது நபி பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட போது தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன.
இந்தியாவின் உளவுத் துறை
இந்த தாக்குதல் நடைபெற்று சில மணித்தியாலங்களில் Khyber Pakhtunkhwa பகுதியின் Hangu நகரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த குண்டுத் தாக்குதல்களை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்தியா தான் இந்த தாக்குதலை நடாத்தியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்ப்ராஸ் புக்டீ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் உளவுத் துறை தான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |