தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டை இல்லாததால் தங்களது முதியோர் உதவித்தொகையை இழந்த, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்காக சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளன.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
முக்கிய அறிவிப்பு
அதன்படி, ஒரு மூத்த குடிமகன் தேசிய அடையாள அட்டை இல்லாததால் தனது முதியோர் உதவித்தொகையை இழந்திருந்தால், கிராம அலுவலர், சமூக மேம்பாட்டு அலுவலர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலரை சந்திக்குமாறு தேசிய முதியோர் செயலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய முதியோர் செயலகம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகையை வழங்குகின்றது.
தற்போதைய அரசாங்கம், ரூ. 3,000 ஆக இருந்த இந்த உதவித்தொகையை ரூ. 5,000 ஆக உயர்த்தவும், உதவித்தொகை பெறத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த முதியோர் உதவித்தொகை தற்போது 698,790 மூத்த குடிமக்களுக்கு 'அஸ்வெசும' கணக்குகள் மூலமாகவும், 232,496 பேருக்கு தபால் நிலையங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.