யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது
புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற இளைஞன் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (12.12.2023) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி
தேடுதல் நடவடிக்கை
பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்த வேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றுள்ளார்.
இதன்போது பொலிஸார் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடை உடைத்து திருடியவர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடை ஒன்றினை உடைத்து, கடையில் இருந்த பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும், திருட்டுப் பொருட்களை வாங்கியவரையும் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்றிரவு (12) கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கடையானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து கடையில் இருந்த தொலைக்காட்சி, கைப்பேசி மீள்நிரப்பு அட்டைகள், சிகரெட் உள்ளிட்ட பல பொருட்கள் களவாடப்பட்டன.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் புத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர் திருடிய தொலைக்காட்சியை விற்பனை செய்த வேளை அதனை வாங்கிய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது களவாடப்பட்ட ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
