ஜனவரியில் குறையவுள்ள மின் கட்டணம்: அமைச்சர் கஞ்சன வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
நீர் மின்சாரத்தில் இருந்து போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீர் மின்சாரம்
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதிக அளவில் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் தான் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த கணிப்புகள் மாறிவிட்டதால் இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டணம் குறைய வாய்ப்பு

எனினும் நான் அவசரப்பட மாட்டேன். இது தொடர்பான தரவு மற்றும் அந்தத் தகவல்களை மின்சார சபையும் அதிகாரிகளுமே வழங்க வேண்டும்.
அதன்படி, டிசம்பர் 31 ஆம் திகதி எங்களின் இருப்புநிலை அறிக்கை முடிந்த பிறகு, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.
தற்போதைய நிலைமைக்கு அமைய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam