தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 99 ஏ பிரிவின் கீழ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தகுதி வாய்ந்த 527 பேரின் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 27 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 527 தேசியப் பட்டியல் பெயர்களை தேர்தல் வேட்புமனுவுடன் சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 29 பேர் அரசியலமைப்பு 99A இன் படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 20 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
