சித்திரைப் புத்தாண்டின் பின் கட்சி தாவல்! - நளின் பண்டார விளக்கம்
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அராசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேல்ய்ம் தெரிவிக்கையில், கட்சி தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் செல்வார்கள்.
கட்சி தாவும் நோக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எப்போதும் கட்சி தாவும் நோக்கத்துடனேயே உள்ளார். அமைச்சுப் பொறுப்பை ஏற்பது குறித்தும் அவர் ஆர்வமாக உள்ளார்.
ராஜித எப்போதும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் காணப்படுகின்றார். கட்சி தாவுவது அவருக்குப் பெரிய விடயமல்ல என தெரிவித்துள்ளார்.
