பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகுவேன்: வீரசேகர எச்சரிக்கை
ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்குமானால் அக்கட்சியில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தான் இன்னும் இருக்கின்றேன். செயநன்றி கடனுக்காகக் கட்சியில் தொடர்கின்றேன்.
இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கை
மொட்டுக் கட்சி தான் வேட்புமனு வழங்கியது. கொழும்பு மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றேன்.
கொழும்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தேன். கட்சி வீழ்ந்திருக்கும் நேரத்தில் அதை விட்டுவிட்டுச் செல்வது நல்லதல்ல.
எனினும், நாட்டைப் பிளவுபடுத்தும், இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதேபோல் ஒற்றையாட்சிக்கு எதிரான விடயங்களுக்குக் கட்சி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் அதன் பின்னர் அங்கு இருக்கமாட்டேன் என
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
