அவர் ஒரு புரொய்லர் இறைச்சிக்கோழி: நாடாளுமன்ற உறுப்பினரை விமர்சித்த விமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் (14.03.2023) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

எதையும் கற்றுக்கொள்ளவில்லை
நாமல் ராஜபக்ச ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், காலத்துக்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழி' என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த விடயங்களே காரணம்.
மேலும், கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், டலஸ் அழகப்பெருமவே அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம்
வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam