வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் கொலை: தீவிரப்படுத்தப்படும் விசாரணைகள்
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைகளின் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
எனவே, இந்த விடயம் தொடர்பில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எமது அரசாங்கம் விசாரணை நடத்தியே தீரும் என குறிப்பிட்டுள்ளார்.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri