ஓட்டமாவடியில் பொலிஸாரின் தலையீட்டால் இரத்து செய்யப்பட்ட கூட்டம்
மட்டக்களப்பில் கோவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டுமாவடி மஜ்மா நகரில் நிலவும் இடப்பற்றாக்குறை தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று(26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் பொலிஸாரின் தலையீட்டால் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.
ஓட்டுமாவடி பிரதேச சபையில் இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு கூட்டம் ஆரம்பமாகவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும், கூட்டத்துக்கு வந்த நபர்களைக் கலைந்து செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இக்கூட்டம் இரத்து செய்யப்பட்டு அங்கு வந்திருந்த பிரமுகர்கள் கலைந்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
