சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையில் சர்திப்பு
சுவிற்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும்,சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், யாழ். போதனா வைத்தியசாலை இயக்குநர் மருத்துவர் த. சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று இடம்பெற்றுள்ளது.
செந்தமிழ் திருமறையில், தாய்மொழி வழிபாடு ஒழுகும் சைவநெறிக்கூடம், சுவிற்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கிவருகின்றது.
பொதுப்பணி
வழிபாட்டுடன் நின்றுவிடாது, பொதுப்பணிகளையும் சிவபணி எனும் திட்டத்தின் கீழ், சுவிற்சர்லாந்து மற்றும் தாயகத்தில் சமய ஆற்றுப்படுத்தல் பணியையும் முன்னெடுத்து வருகின்றது.
சுவிற்சர்லாந்தில் சமய ஆற்றுப்படுத்தல் தொண்டினை "உளவள ஆற்றுகை" எனும் பெயரில், 2021 முதல் சைவநெறிக்கூடம் முன்னெடுத்து வருகின்றது.
பேர்ன் மாநில அரசின் அங்கீகாரத்துடன், மருத்துவமனைகள் மற்றும் மூதாளர் இல்லங்களில் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை,சைவநெறிக்கூடத்துடன் பல்வேறு பணிகளில் இணைந்து பணியாற்றும் பேர்ன் மாநில தாதியர் கல்லூரியின் அதிபர் பேத்திரா பூர்க்கியா இதில் கலந்து கொண்டனர்.
இவர் சுவிற்சர்லாந்து மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையில் தாதியர் பணிப் பட்டறிவைப் பரிமாறும் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இதன் மூலம் சுவிற்சர்லாந்தின் தாதியரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதும், அங்கு பணியாற்றும் தாதியரை சுவிற்சர்லாந்துக்கு அனுப்பி பயிற்சி வழங்குவதும் உள்ளடக்கமாகும்.
இவ்வினைநிலையில் சைவநெறிக்கூடத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் தனியொளிச்சிவம் செல்லத்துரை பிரசாத் மற்றும் சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் இளையோர் பணி மதியுரைஞரும், சட்டவாளருமான செல்வி லாவன்யா சின்னத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புலம்பெயர் தமிழ் மக்களின் வளங்களை தாயக மக்களுக்கு வழங்கும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவ் சந்திப்பு சுவிசில் முன்மொழியப்பட்ட நலவாழ்வு திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு முக்கிய வழிவகை செய்யும் என சிவருசி சசிக்குமார் நம்பிக்கை வெளியிட்டார்.

