கல்வி கூட்டுறவுச் சங்க தேர்தலில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வேட்பாளர்கள் அமோக வெற்றி
கல்வி கூட்டுறவுச் சங்க தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்து
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி கூட்டுறவுச் சங்க தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சார்பாக போட்டியிட்ட பெரும்பான்மையான வேட்பாளர்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளார்கள்.அந்த நிர்வாக சபையை கைப்பற்றியுள்ளார்கள்.
இதற்கு வாக்களித்த கல்வி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |