இந்தோனேசிய தூதுவருக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (10.01.2024) கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இதன் போது இந்தோனோசியாவில் நடைபெறவுள்ள நீர் சம்பந்தமான சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
பொருளாதார காரணிகள்
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் அரசியல், பொருளாதார காரணிகள் தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
அதேபோல தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், கொள்கை ரீதியில் ஏற்படவுள்ள மாற்றங்கள், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான வியூகங்கள் தொடர்பில் அமைச்சர் இதன்போது தூதுவருக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும், அனைவருக்கும் சுகாதார பாதுகாப்புடன் குடிநீரை தடையின்றி வழங்குவதற்காகவும், நீர் கட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் தூதுவரிடம் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட பகுதிகளின் நிலவரம், அதனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், அதற்கு இந்தோனேசியா எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |