அனுரவின் கனடா விஜயத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் வாழ்த்து
கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று(13.03.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை
இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பில் இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இடம்பெற்றதோடு தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதாக அனுர தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
