நாட்டு மக்களுக்கு நற்செய்தி: இன்று முதல் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் பலவகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று (26.06.2023) முதல் 60 வகையான மருந்துகளின் விலை 16 சதவீதம் குறைக்கப்பட உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16 சதவீதம் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாகக் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
