சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
வறண்ட காலநிலை மற்றும் தூசி காரணமாக சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு அதிகரித்து வருவதாக கொழும்பு - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (16.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகளுக்குப் பகல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இருமல் ஏற்படுவதுடன் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும். இவ்வாறான நிலைமைகளுக்கு தமது மருத்துவமனையில் சிகிச்சைகள் கிடைக்கப்பெறும்.
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
திரவங்களை வழங்க வேண்டும்
குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்குக் காய்ச்சல், வாந்தி, தளர்வான இயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும், நீரிழப்பைத் தவிர்க்க அவர்களுக்கு இயற்கையான திரவங்களை வழங்க வேண்டும் என்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |