கிழக்கில் ஆக்கிரமைக்கப்படும் தமிழர் நிலம்: வீதிக்கு இறங்கிய பல்கலை மாணவர்கள்
மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் கால்நடைகளுக்கான மேச்சல்தரைக் காணிகள் பெரும்பான்மையினத்தவர்களால் அரச ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்படுவதினை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (02.11.2023) கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றுள்ளது.
மயிலத்தமடு - மாதவனைப்பகுதியில் காணப்படும் கால் நடை வளர்ப்பாளர்களுக்கான மேச்சல் தரைக்காணிகள் அம்பாறையில் இருந்து வருகை தந்துள்ள பெரும்பான்மையின விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அதேவேளை தமிழருக்குரிய கால்நடைகள் சுட்டுக்கொல்லப்படுகின்றன.
நீதி வழங்கக்கோரி போராட்டம்
இதன் காரணமாக மட்டக்களப்பை சேர்ந்த கால் நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மௌனமாக இருப்பதுடன் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் இவ்விடயம் தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களால் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்முகமாக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஊர்வலமாக சென்று சித்தாண்டியில் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.








பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
