பொதுஜன பெரமுனவினரை ஆட்டிப் படைக்கும் கர்மவினை....! விமல் வீரவன்ச சாடல்
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் கர்மவினையை அனுபவித்து வருகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கூட்டணி கலாசாரம் பற்றி தற்போது கதைக்கும் அவர்கள் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் அதனை மறந்தே செயற்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டணியாகச் செயற்படும் போது பங்காளிக் கட்சிகளினதும் ஆலோசனையைப் பெற்று, அதற்கமைய செயற்படுமாறு ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அந்த ஆட்சி தான் இன்றும் நீடித்திருக்கும்.
நாமலின் கருத்தைக் கேட்கும் போது சிரிப்புத் தான் வந்தது. அதுதான் கர்மவினை. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை எப்படியாவது ஒத்தி வைத்து ஆட்சியை தக்கவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார்.
அதற்காக சலுகை அறிவிப்புகள் வெளிவருகின்றன. இப்படியான தற்காலிக நடவடிக்கைகளால் தான் நாடு நாசமானது.
எனவே, புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 19 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
