நிதி மோசடி வழக்கிலிருந்து நாமல் உள்ளிட்ட ஐவர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 5 பிரதிவாதிகளை கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாட்டு தரப்பு வழங்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், அவற்றில் நம்பிக்கை இல்லை எனவும் அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், தற்போது நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான பிரபாத் கருணாஜீவவுக்கும், நான்காம் பிரதிவாதிக்கும் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை உடனடியாக நீக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பிரபாத் கருணாஜீவவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட திறந்த பிடியாணையை மீளப் பெறுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போது முறைகேடாக ஈட்டிய 3 கோடி ரூபா பணத்தை கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவனத்தில் பயன்படுத்தியமை ஊடாகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
