திடீர் தொழில்நுட்பக்கோளாறு! சொத்து பிரகடனங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
புதிய இணைப்பு
தொழில்நுட்பக்கோளாறுகள் காரணமாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், ஜூலை 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதிகமானோர் ஒரே நேரத்தில் படிவங்களை சமர்ப்பிக்க முயன்றதால் ஏற்பட்ட இணையதள தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் எந்த அபராதமும் விதிக்கப்படாது என்றும், எனவே பிரகடனங்களை இணையவழியில் தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அரச உயர் அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் (30) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் இன்றைய தினத்துக்குள் தமது சொத்து, பொறுப்பு விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இல்லையேல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச உயர் அதிகாரிகளுக்கு அபராதம்
எனவே சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்கள் அனைத்தையும் உத்தியோகபூர்வ இணையதளமான https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏராளமான மக்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் இணையதளத்தை இணையவழியில் அணுகி, தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளைச் சமர்ப்பித்ததால், இணையதளத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மேற்கூறிய இடையூறு காரணமாக இன்று தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க இயலாத நபர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 7 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam