நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை! முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
எரிபொருள் விலை குறைந்தாலும், பாடசாலை போக்குவரத்து கட்டணங்களும், முச்சக்கர வண்டி வாடகை கட்டணங்களும் குறையாது என்று அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம், நேற்று (29) நள்ளிரவு முதல் இரண்டு வகையான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, எரிபொருள் விலை குறைந்தாலும், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், கட்டணங்களில் எந்த திருத்தமும் செய்ய இயலாது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி தொழில் 16 ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதன் பொதுச்செயலாளர் லலித் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
குறைக்கப்பட்ட எரிபொருள் விலை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CBC), நேற்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் ஆட்டோ டீசல் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ஆக்டேன் 92-ன் விலை ரூ. 20 குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஆட்டோ டீசலின் விலை ரூ. 25 குறைக்கப்பட்டு ரூ. 382 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுரேஸ் சலேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு - அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள புதிய மருத்துவ அறிக்கை