தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் (NLB) தலைவர் ஷியாமிலா பெரேராவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் கலிங்க இந்ததிஸ்ஸா ஆகியோர் சமர்ப்பித்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சந்தேக நபரை தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்கவும், வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு்ள்ளார்.
சந்தேக நபர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டு்ள்ளார்.
முதலாம் இணைப்பு
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக அவர் இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட 3 அதிகாரிகளை, அந்த நிறுவனத்தில் பணியமர்த்துவதற்குப் பதிலாக, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணிபுரிய அமர்த்தியதன் மூலம் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
