சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் எரிபொருள் விலை - இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு ஒட்டோ டீசல் மற்றும் கைத்தொழில் டீசலுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்காக, ஒக்டோபர் மாதத்துக்கு 15 பில்லியன் ரூபாயும், நவம்பர் மாதத்துக்கு 13.5 பில்லியன் ரூபாயும், டிசம்பர் மாதத்துக்கு 12.15 பில்லியன் ரூபாயும் ஒதுக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிவாரணத்தின் நோக்கம்
இதற்கமைய, இந்த மூன்று மாதங்களுக்கான டீசல் மானியத்திற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகை 40.65 பில்லியன் ரூபாயாகும்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்வடைவதற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்காமல், நுகர்வோருக்கு சுமையற்ற வகையில் கட்டுப்படியாகும் மட்டத்தில் பேணுவதே இந்த நிவாரணத்தின் நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri