கிளிநொச்சியில் வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது
கிளிநொச்சியில் சில பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தாயும், மகனும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.
தங்க நகை மற்றும் பணம் மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 21 அரை (21 ½) பவுன் தங்க நகைகளும், பத்து லட்சம் (ரூ. 10,00,000) ரூபா ரொக்கப் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam