90ஆவது நாளை எட்டிய மயிலத்தமடு போராட்டம் (Photos)
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் தொடர் கவன ஈர்ப்பு
போராட்டமானது 90ஆவது நாளை எட்டியுள்ளது.
குறித்த தொடர் போராட்டமானது இன்றும்(13.12.2023)மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
90ஆவது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் தமது கோரிக்கை தொடர்பிலும் போராட்டம் தொடர்பிலும் பொறுப்புக்கூறவேண்டிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டும் காணாத நிலையிலும் அலட்சியப்போக்குடனும் செயற்பட்டுவருவதாக தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
துவாரகாவின் பெயரைப் பயன்படுத்தி 45 நிமிடங்களில் சேர்க்கப்பட்ட பணம்! அம்பலப்படுத்தப்பட்ட இரகசியம்(Video)
அத்துமீறிய குடியேற்றம்
மேலும், கடந்த மூன்று மாதங்களில் 190க்கும் அதிகமான மாடுகள் மயிலத்தமடு, மாதவனையில் கொல்லப்பட்டுள்ளது.இவற்றிற்கான முழுப்பொறுப்பினையும் மாவட்ட அரசாங்க அதிபரும் அதனுடன் இணைந்த திணைக்களங்களுமே ஏற்க வேண்டும் என மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
எங்கள் மேய்ச்சல் தரைகள் எங்களுக்கே சொந்தம், பசி துறக்கவந்த விலகின் உயிர் துறப்பது பௌத்த தர்மமா?,உயிர் கொலை புத்தனின் பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கா?, மாதவனை எங்கள் சொத்து போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தாங்கள் போராட்டம் நடாத்த தொடங்கி இன்றுடன் 90 நாட்கள் கடந்துள்ள நிலையில் 190க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அத்துமீறிய குடியேற்றக்காரர்களினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு முறையிடச்சென்றால் முறைப்பாட்டை தங்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் இதன்போது பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.
விவசாய நடவடிக்கைகள் காலத்தில் தங்களை கால்நடைகளை மயிலத்தமடு, மாதவனைக்கு கொண்டு செல்லுமாறு தீர்மானங்கள் மாவட்ட, பிரதேச விவசாய குழுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டு நாங்கள் அங்கு மாடுகளை கொண்டு செல்லும்போது அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜனாதிபதி,அரசியல்வாதிகள்,அதிகாரிகள் அனைவரும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
மாறாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகளே அதிகரித்துவருகின்றது.அங்கு கால்நடை பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு என அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரணும் அங்கு சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களுக்கு உதவும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்பதையே பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் தங்கள் மீது புகார் என்றால் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கையெடுக்கும் பொலிஸார் தங்களால் வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையே காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பொலிஸாரோ மகாவலி அபிவிருத்தி திணைக்களமோ இதுவரையில் நிறைவேற்றாத நிலையே காணப்படுவதாகவும் இது தொடர்பில் சட்டத்தரணிகள் நீதிபதிகள் பொலிஸாரை வலியுறுத்தவேண்டும் எனவும் இதன்போது பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.
தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்கொண்டு செல்லவுள்ளதாகவும் தமக்கு நீதிகிடைக்காவிட்டால் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கத்தினை செய்யவேண்டிய நிலையேற்படும் எனவும் பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |