உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை
காசாவில் உள்ள 36 வைத்தியசாலைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் ரிச்சர்ட் பீப்பர்கார்ன் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரக் கட்டமைப்பு பாதிப்பு
அவர் மேலும் குறிப்பிடுகையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவிலுள்ள 3 இல் ஒரு பகுதிக்கும் குறைவான வைத்தியசாலைகளே ஓரளவேனும் இயங்கி வருகின்றன.
அத்துடன், கடந்த 66 நாட்களில் காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
காசாவிலுள்ள 11 வைத்தியசாலைகள் ஓரளவில் செயற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன என உலக சுகாதார அமைப்பின் ரிச்சர்ட் பீப்பர்கார்ன் தெரிவித்துள்ளார்.